நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் அதிரடி கட்டண உயர்வு...!

Posted By:

சென்னை : 2012-2013ம் ஆண்டிற்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் 2012-2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த கல்வியாண்டில் (2017-2018) உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் அதிரடி கட்டண உயர்வு...!

பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு இடஒதுக்கீட்டிற்கு கல்விக் கட்டணம் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அரசு இடஒதுக்கீட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு கல்விக் கட்டணம் 70 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ரூபாய்
நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகளின் தொடர் தோல்விக் காரணமாக இந்தக் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. 2012 -2013ம் ஆண்டிற்கு பின்னர் இந்த ஆண்டுதான் கட்டண நிர்ணயத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மட்டும் 11 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்த தாக்கம்தான் கட்டண உயர்வுக்கு காரணமாக அமைகிறது.

English summary
Above article mentioned that Education fees increased in Engineering colleges

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia