அகமதாபாத்தில் கல்வி கண்காட்சி!

Posted By:

சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கல்வி கண்காட்சி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சிக்கு ஐடிபி எஜுகேஷன் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அகமதாபாத்திலுள்ள ஹயாத் ஹோட்டலில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

கண்காட்சியில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரபலமான பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைக்கவுள்ளன.

அகமதாபாத்தில் கல்வி கண்காட்சி!

இந்தக் கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு பிரிட்டன், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கிடைக்கும் படிப்புகள், அங்கு செல்வதற்கு விசா போன்ற விவரங்கள் அளிக்கப்படும். மேலும் படிப்பதற்கு கடன் வசதியைப் பெற்றுத் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கண்காட்சி நடைபெறும் இடத்திலேயே உடனடியாக சேர்க்கை அனுமதியையும் அவர்கள் பெற முடியும். 20-க்கும் மேற்பட்ட பிரபலமான பல்கலைக்கழகங்கள் இங்கு ஸ்டால்களை அமைக்கவுள்ள மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளனர்.

வர்த்தக மேலாண்மை, நிதி, ஹோட்டல் படிப்புகள், தகவல் தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் அறிவியல், பார்மசி, உயிர் அறிவியல், சுகாதார நல நிர்வாகம், சட்டம், மருத்துவம், நர்சிங், கலை, டிசைன், மாஸ் கம்யூனிகேஷன் உள்ளிட் படிப்புகளை அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் இங்கு தகவல்களைத் தரவுள்ளன.

நியூ கனடா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளன.

English summary
IDP Education India will be organizing a multi-destination Education Fair in Ahmedabad on 14th September 2015 at Hyatt Ahmedabad. IDP Education India, a student placement service provider has organised the fair for students aspiring to pursue higher education abroad. According to IDP, applications are invited from more than 20 leading universities/institutions in UK, USA and Canada for 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia