ரஷியாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி ஜூன் 10 மற்றும் 11...!

Posted By:

சென்னை : தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பின் துணை தூதரகம் மற்றும் ரஷிய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ரஷிய கல்வி கண்காட்சி நடத்துகிறது.

இதில் மருத்துவம், என்ஜீனியரிங் மற்றும் ஏவியேஷன் கல்வியை கற்பிக்கும் முன்னணி ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த இலவச கண்காட்சி 10, 11ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ரஷியாவின் பல்வேறு மருத்துவ கல்வி நிலையங்கள் 500 மருத்துவ படிப்பிற்கான இடங்களை இந்திய மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை சலுகை கட்டணங்களில் வழங்க உள்ளன.

ரஷியாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க..  சென்னையில் கல்வி கண்காட்சி ஜூன் 10 மற்றும் 11...!

இந்த கண்காட்சி குறித்து ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் மைக்கேல் இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் கூறுகையில் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ்களை சமர்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கடிதம் இக்கண்காட்சியிலேயே வழங்கப்படும். ரஷிய கல்வி நிறுவனங்களில் அதிக சலுகை கட்டணங்களில் அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார்.

நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்த கல்வி கண்காட்சி இந்திய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில வழிவகுக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்று ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
The Russian Educational Exhibition will be held on June 10 and 11 in Chennai to study medicine and engineering, Arts and science courses in Russia.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia