ரஷியாவில் மருத்துவம், என்ஜீனியரிங் குறைந்த செலவில் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி மே 13 மற்றும

Posted By:

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வருகிற 13 மற்றும் 14ந் தேதிகிளில் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சி 2 நாட்களும் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடை பெற இருக்கிறது. அனுமதி இலவசம்.

இந்த கண்காட்சியில் ரஷியாவை சேர்ந்த அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட 12 ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கண்காட்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரஷியாவில் மருத்துவம், என்ஜீனியரிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க செலவாகும் தொகை, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த வருடம் தமிழகத்தில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று இதுவரை அறிவிக்கவில்லை. நீட் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், இங்கு இடம் கிடைக்காதவர்கள் ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளை நாட கூடும்.

ரஷியாவில் மருத்துவ படிப்பு

இதனால் இங்கிருந்து மருத்துவ படிப்பை ரஷியாவில் படிக்கசெல்லும மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. இதற்கேற்ப இந்த வருடம் ரஷியாவில் இந்ததிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 500 இடங்கள் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடத்தை விட மருத்துவம் படிக்க 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு கிடையாது

மாணவர்கள் ரஷியாவில் படிப்பில் சேர எந்த வித நுழைவுத் தேர்வும் (சி.இ,டி) கிடையாது. மாணவ மாணவிகள் பட்டப்படிப்புகளில் சேர குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எஸ்சி எஸ்டி மாணவ மாணிவகளுக்கு 40 சதவீத மதிப்பெண் இருந்தால் போதும். பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களை கண்காட்சியில் சமர்ப்பிப்பவர்களுக்கு அங்கேயே மாணவர் சேர்க்கை ஆணை உடனடியாக வழங்கப்பட உள்ளது.

இந்திய கவுன்சில் அங்கீகாரம்

தற்பேது ரஷியாவில் இந்திய மாணவ மாணவிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள் இந்திய மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியில் தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரஷியாவில் 63 அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை அனைத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவை. மேலும் உலக சுகாதர அமைப்பின் மருத்துவ கல்லலூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2 லட்சம் பேர் படிக்கிறார்கள்

ரஷிய பல்கலைக்கழகங்களில் உலக அளவில் 200 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். ரஷியாவில் கல்வி ஆண்டு செப்டம்பர் மாதம் 1ந் தேதி தொடங்குகிறது என தென்னிந்திய ரஷிய தூதரகத்தின் துணைத்தூதர் யூரி எஸ். பெலோவ் ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் தெரிவித்துள்ளனர்.

English summary
The Russian Educational Exhibition will be held on May 13 and 14 in Chennai to study medicine and engineering, Arts and science courses in Russia.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia