மாணவர்களுக்கு டெபாசிட் திருப்பித் தராத கல்லூரிகள்: நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை முடிவு

Posted By: Jayanthi

சென்னை: முன் வைப்புத் தொகையை மாணவர்களுக்கு திரும்ப கொடுக்காத பொறியியல் கல்லூரிகள் குறித்து உயர் கல்வித் துறை பட்டியல் தயாரித்து வருகிறது.

இதையடுத்து அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு டெபாசிட் திருப்பித் தராத கல்லூரிகள்: நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை முடிவு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் 450 செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 65க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டு தோறும் இட ஒதுக்கீட்டுக்கு கவுன்சலிங் நடத்தி அண்ணா பல்கலைக் கழகம் இட ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உத்தரவு பெற்று செல்லும் மாணவ மாணவியர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் போது, அந்த கல்லூரிகள் மாணவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை தான் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இருப்பினும் அந்த கல்லூரிகள் மாணவர்களிடம் முன் வைப்புத் தொகை என்றும், நூலகத்துக்காக தொகை என்றும் பல்வேறு பிரிவுகளில் மாணவர்களிடம் முன் வைப்பு தொகையை பெறுகின்றன. இவற்றை திரும்பவும் தருவோம் என்ற உறுதி மொழியுடன் பெறுகின்றனர். ஆனால், மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியில் வரும்போது முன் வைப்புத் தொகை தருவதில்லை என்ற புகார்கள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு இப்போது நிறைய வருகின்றன.

இந்த புகார்கள் குறித்து உயர்கல்வித்துறைக்கு அண்ணா பல்கலைக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து முன் வைப்புத் தெகையை திரும்ப கொடுக்க மறுக்கும் கல்லூரிகள் குறித்து பட்டியல் தயாரிக்கும் பணியில் உயர்கல்வித்துறை இறங்கியுள்ளது. விரைவில் அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

English summary
The Department of Higher Education has decided to sent notice to Colleges those not returning the deposit amount to students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia