எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆந்திர முதல்வர் நாயுடு பங்கேற்பு

Posted By:

சென்னை: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆந்திர முதல்வர் நாயுடு பங்கேற்பு

ஆந்திர முதல்வர்

பட்டமளிப்பு விழா சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆந்திர முதல்வர் நாயுடு பங்கேற்பு

நாயுடு பேச்சு

பட்டமளிப்பு விழாச் சிறப்புரையில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நெருக்கடியான தருணங்களை வாய்ப்பாக எண்ணித் திறம்பட செயல்படுத்தும் திறமையே தலைமைப்பண்பாகும்.

உலகப் பொருளாதாரம்

பட்டம் பெற்ற மாணவர்கள் இதனைப் பின்பற்றினால் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகப் பொருளாதார நிலையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக விளங்கும்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆந்திர முதல்வர் நாயுடு பங்கேற்பு

எதிர்காலம்

பொறுப்புணர்வுள்ள, திறமையான உங்களைப் போன்ற மாணவர்களின் தோள்களில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

வளர்ச்சி

மாணவர்கள் நீங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அடையக்கூடிய நிலையும் தனிமனித வளர்ச்சி மட்டும் ஆகாது. அது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி ஆகும்.

எஸ்ஆர்எம் புகழ்

நாட்டின் எப்பகுதியிலும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் புகழ் பரவி வருகிறது. ஒரு அரசோ ஏனைய தனியார் நிறுவனங்களோ நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்களை விட எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழ்கிறது".

பிரிவினையால் நம்பிக்கை குறையவில்லை

"ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பிரிவினை எங்களுக்குப் கல்வி, பொருளாதாரம், கட்டுமானம் முதலான பல்வேறு துறைசார் நெருக்கடிகளை ஏற்படுத்திய போதிலும், எங்கள் நம்பிக்கை மட்டும் சிறிதும் குறையவில்லை"

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆந்திர முதல்வர் நாயுடு பங்கேற்பு

ஆந்திரத்திலும் தொடங்க அழைப்பு

"சென்னையில் சிறந்து விளங்கக்கூடிய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தினை ஆந்திரத்திலும் தொடங்க, பல்கலைக்கழக வேந்தர் முன்வரவேண்டும் ஆனால் அது சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தை விட சிறப்புடன் அமைய வேண்டும் என்றார் அவர்

5 ஆயிரத்துக்கும் மேல்...

இப்பட்டமளிப்பு விழாவில் பி.டெக், பி.ஆர்க், பி.டெஸ் முதலான துறைகளில் பயின்ற 5615 மாணவர்களும், 63 முனைவர் பட்டம் பயின்ற மாணவர்களும் பட்டம் பெற்றனர். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் தலைவர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாரிவேந்தர்

இப்பட்டமளிப்பு விழாவினை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் - வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்று நட்த்தினார்.

English summary
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu today said individuals and societies are transformed for education while stating the country's youth would certainly transform India in the years to come.Speaking at the 11th convocation of SRM University at Kattankulathur here, Chandrababu Naidu said, 'individuals and societies are transformed by education. I say this from my own experience. I come from a small village and remember walking six kilometers to reach my school. But I did it and that transformed me. I went from local school to the high school, then to college and then to the university. And the university shaped me into an activist.'

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia