சென்னை: விளையாட்டு வீரர்கள் கிழக்கு ரயில்வே வேலை பெறுவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் டிசம்பர் 16-ம் தேதிக்குள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 21 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

வில்வித்தை(ஆண், பெண்), தடகளம்(ஆண், பெண்), வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், சைக்கிளிங், ஹாக்கி, கபடி, துப்பாக்கிச் சுடுதல், பளுதூக்குதல் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கும் ஆடவர், மகளிர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்கள் பிரிவு 1, பிரிவு 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவு-1 பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். பிரிவு-2 பணியிடங்களுக்கு ஐடிஐ மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது 18 முதல் 25 வயதுக்குள்(ஜனவரி 1, 2016-ன் படி) இருக்கவேண்டும். தகுதியுள்ள நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கிழக்கு ரயில்வே கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டதாகும். மேலும் விவரங்களுக்கு கிழக்கு ரயில்வேயின் இணையதளமான http://www.er.indianrailways.gov.in-ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












