ஒக்கி புயலால தமிழகத்தில் பதினைந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Posted By:

ஒக்கி மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழக பள்ளிகளுக்கு ஓக்கி புயல் காரணமாக விடுமுறை

தமிழகத்தின் வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமாகி கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் ஒக்கி புயலாக மையம் கொண்டிருந்ததை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளத்தின் ஒரு பகுதியில் பெய்த கனத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. ஒக்கி புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளான தென் தமிழகத்தில் பதினைந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 48 மணிநேரத்திற்கு கனத்த மழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 85 கிமீ வேகத்தில் வீசப்படும் மழையினால் மாணவர்கள் பாதிக்கப்படகூடாது என விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு நடக்கும் இந்த காலகட்டத்தில் மழையால தேர்வு நாட்கள் தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், காஞ்சி, தேனி , சேலம், புதுக்கோட்டை, நீலகிரி போன்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் கொண்டுள்ள புயல் அரபிக் கடல் நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லுரிகளுக்கு நாளையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியா குமரியில் அடித்து வீசப்பட்ட மழையால 500 கணக்கில் மரங்கள் விழுந்துள்ளன. இதனையடுத்து 300 மின் கம்பங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் மின்சாரம் மாவட்ட முழுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்திலும் இதே மழையால மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது பள்ளிக்கல்வித்துறை. ஒக்கி புயல் கடந்தப்பின் பள்ளிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டபின் செயல்படும். தமிழகத்தில் கனத்த  மழை நீடித்தால தொடர்ந்து விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஒக்கி புயல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மேலும் மழை  அதிரித்தால்  பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படும்.  மேலும் பள்ளிகளில் அனைத்து  பணிகளும் முறைப்படுத்தப்பட்ட பின்தான் பள்ளிகள்  மீண்டும் செயலபடும். ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை பழுது பார்த்தப்பின் அவை தொடரும். 

சார்ந்த பதிவுகள் :

பள்ளிகள் இனறு முதல் திறப்பு மழைகாரணமாக கொடுக்கப்பட்ட விடுமுறை முடிவு! 

பத்து கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !!

English summary
here article tell about leave announcement for school students
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia