கடலோர மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கொட்டும் மழை காரணமாக விடுமுறை

Posted By:

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட10 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை . திருவாரூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது நேற்று விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றிருந்த நிலையில் காலை முதல் கனத்த மழை பெய்து வருவதால் இன்றும் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகின்றது.

கொட்டும் மழை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவு

சென்னை, திருவள்ளூர், திருவாரூர், உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகின்றது. பத்து மாவட்டங்களுக்கு இன்று நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிப்பதால் இன்றும் மாவட்ட ஆட்சியர்கள் விடுப்பு அளித்துள்ளனர். விழுப்புரம், வேலுர், காரைக்கால் , மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை நீர் தேக்கம் ஆங்காங்கே இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி அரசு விடுமுறை அளித்துள்ளது. கனமழையால் அரக்கோணம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. அரையாண்டு தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மழையால்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே மழை காரணமாக தேசிய திறனாய்வு தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த பதிவுகள்:

தொடர்மழை எதிரொலி பள்ளிகளுக்கு விடுமுறை, தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு 

பத்து கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !!

English summary
here article tell about schools leave by heavy rain

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia