டிரைவர் பணி செய்ய அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில்!!

Posted By:

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்புக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

சென்னையில் கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்த மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை செய்ய டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது 2 டிரைவர்களுக்கு பணிவாய்ப்பளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிரைவர் பணி செய்ய அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில்!!

விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

ரூ.1-,170 முதல் ரூ.18500 என்ற அடிப்படையில் சம்பளம் இருக்கும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, கனரக வாகன(எச்எம்வி) உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

சோதனை, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் டிரைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிரைவர்கள் தங்களது பயோ-டேட்டாவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://chennaimetrorail.gov.in-ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 29 ஆகும்.

English summary
chennai Metro Rail Limited invited application for recruitment to 02 posts of Driver - Special Vehicles. The candidates eligible for the post can apply through prescribed format before 29 August 2015. Post Details Name of Post: Driver - Special Vehicles Number of Post: 02 Pay Scale: Rs 10,170-18,500 Eligibility Criteria Educational Qualification: Candidate must have passed +2 and must have Heavy Motor Vehicle (HMV) license issued by Government of Tamil Nadu.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia