சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு காத்திருக்கு!!

Posted By:

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வருகிறது. 2 வழித்தடங்களில் ரயில்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு காத்திருக்கு!!

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சிறப்பு வாகன ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது நிறுவனம்.

மொத்தம் சிறப்பு வாகன ஓட்டுநர் பணியிடத்துக்காக 2 வேலை இடங்கள் உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசின் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட அனுபவம் பெற்றவர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் மாதம் ரூ.10,170 - 18,500 என்ற அடிப்படையில் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் இந்தப் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்படுவர். http://www.chennaimetrorail.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonnamalle High Road, Koyam Bedu, Chennai - 600107 என்ற முகவரிக்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf என்ற இணையதளத் லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

English summary
Chennai Metro rail Corporation has invited applicaions for the post od drivers. For more details aspirants can logon into http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia