பாதுகாப்புத் துறையில் நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி பணி!

Posted By:

சென்னை: பாதுகாப்புத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஇ) இளநிலை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ஓர் அங்கமாகும் இந்த டிஆர்டிஇ.
குவாலியரிலுள்ள டிஆர்டிஇ-ல் இந்த பணியிட வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பதவியில் 4 காலியிடங்கள் உள்ளன.

பாதுகாப்புத் துறையில் நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி பணி!

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பி.ஜி. பட்டப்படிப்பைப் படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் நெட் தேர்விலும் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

28 வயதுக்குள்ளாக இருத்தல் அவசியம். இந்த பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ஸ்டைபண்ட் இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் முழு விவரத்துடன் "Director, DRDE, Jhansi Road, Gwalior - 474 002" என்ற முகவரிக்கு அடுத்த 21 நாட்களுக்குள்ளாக அனுப்பவேண்டும்.

English summary
Defence Research & Development Establishment (DRDE), Gwalior invited applications from eligible candidates to fill up post of ‘Junior Research Fellowship (JRF)'. The candidates eligible for the post may apply within 21 days from the date of publication of the advertisement in the Employment News.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia