அம்பேத்கர் திறந்தவெளி பல்கலை.யில் பட்ட, பட்டமேல்படிப்புகள்

Posted By:

சென்னை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்(BRAOU) பட்ட, பட்டமேல்படிப்பு படிப்பதற்காக அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது.

2015-16-ம் கல்வியாண்டில் பல்வேறு பட்டப்படிப்புகள், பட்டமேல்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது அம்பேத்கர் பல்கலைக்கழகம். ஓராண்டில் பயிலக் கூடிய நூலக அறிவியல் படிப்பு, 3 ஆண்டுகள் பயிலும் வகையில் ஹோட்டல் நிர்வாகம், நிர்வாக மேலாண்மை, 2 ஆண்டுகள் பயிலும் வகையில் எம்.ஏ. பொருளாதாரம், வரலாறு, அரசியல், பொது நிர்வாகம், ஆங்கிலம், ஹிந்தி, உருது, எம்எஸ்சி படிப்பு, எம்காம் படிப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழகம்.

அம்பேத்கர் திறந்தவெளி பல்கலை.யில் பட்ட, பட்டமேல்படிப்புகள்

அங்கீகரிக்கப்பட்ட நூலகங்களில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் ஓராண்டு பயிலும் வகையிலான பி.எல்ஐசிஎஸ்சி படிப்பு பயில முடியும்.

அதேபோல பட்டமேல்படிப்பு பயில விரும்புபவர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும்.

படிப்பு பயில விரும்புபவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 8 ஆகும். அபராதத்துடன் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி நவம்பர் 26 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் http://www.braou.ac.in/ என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Dr. B R Ambedkar Open University (BRAOU), Hyderabad has invited applications for admissions to various Under Graduate and Post Graduate programmes for the session 2015-16. Admission are offered in 1 year distance Bachelor of Library Science and Information Sciences (B.LISc), 3 years Bachelor of Hotel Management (BHM), 3 years Master's Degree in Business Administration (MBA), 2 year Master of Arts (M.A) programmes in Economics, History, Political Science, Public Administration, Sociology, English, Hindi, Urdu, Master of Science (M.Sc), Master of Commerce (M.Com).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia