அம்பேத்கர் சட்டபல்கலை கழகத்தின் தரவரிசை வெளியீடு ,

Posted By:

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கைகான தரவரிசைப்பட்டியல் (இன்று 27) வெளியிடப்ப்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் சட்டக்கல்லுரியில் ஐந்து வருட படிப்பான சட்டக்கல்லுரியில் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு , மேலும் அத்துடன் மாணவர்களின் கட் ஆஃப் வெளியிடப்படும் . கட் ஆஃப் மற்றும் தரவரிசை பட்டியல் அறிந்துகொள்ள பல்கலை கழகத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் www.tndalu.ac.in பார்த்து அறிந்துகொள்ளலாம் . தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைகழகமானது 1997 முதல் இயங்கி வருகின்றது . இப்பல்கலைகழகத்தின் துணைவேந்தராக திரு வணங்காமுடி 2013 முதல் பணியாற்றி வருகிறார் .

அம்பேத்கர் சட்டபல்கலைகழகத்தின் தரவரிசை கட் ஆஃப் மாணவர்கள் சேர்க்கை

மேலும் சட்டப் பல்கலைகழகத்தில்லுள்ள ஆற்றல் சார் ஐந்து ஆண்டு ஹானர்ஸ் சட்ட படிப்புகளுக்கான தரவரிசை வெளியீடு அத்துடன் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்களும் இன்று வெளியீடுகின்றனர். சட்ட பல்கலைகழகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் சட்டக்கல்லுரிகளில் இடம்பெற்றுள்ள இளநிலை சட்டப்படிப்புகளுக்கான ஒற்றை சாளர கலந்தாய்வை அம்பேத்கர் சட்டக்கல்லுரி நடத்தவுள்ளது . ஆற்றல்சார் பள்ளியின் ஐந்து வருடப்படிப்பிற்கு 3000 விண்ணப்பங்கள் மே 31 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளன . அவற்றில் 2934 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளன. அவற்றின் தரவரிசை சட்டக்கல்லுரியின் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்படும் .

English summary
here article mentioned about Ambedkar law university rank list launched

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia