ஜம்மு காஷ்மீரில் கழுதைக்கு ஹால்டிக்கெட்!

Posted By: Kani

ஜம்மு காஷ்மீர் மாநில பணியாளர் தேர்வாணையம் சார்பில் தாசில்தார்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த கச்சூர் கார் என்பவரது ஹால்டிக்கெட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக, கழுதையின் படம் இடம்பெற்றுள்ளது.

இதை அவர் தற்போது சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் வெளியிட இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டில், தேர்வு ஹால்டிக்கெட்டில், பசுவின் படம் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்த நிலையில் தற்போது கழுதையின் படம் வெளியாகி உள்ளது.

 

English summary
donkey gets hall ticket for J&K exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia