அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள்.. நேரடியாக நியமிக்க அழைக்கிறது தமிழக அரசு!

Posted By:

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 மருத்துவர்களை நேரடியாக நியமிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

டாக்டர்களை நேரடியாக அழைத்து நேர்காணல் மூலமாக தற்காலிகமாக நியமினம் செய்யப்படவுள்ளனர். இதற்காக இணையதளம் மூலமாக டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள்.. நேரடியாக நியமிக்க அழைக்கிறது தமிழக அரசு!

பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடய அறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச் சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் 547 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு, விண்ணப்பங்கள் www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து, இணையதளம் வழியாகவே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

English summary
Doctors will be Recruited directly in Tamilnadu Government hospitals through online. For more details aspirants can logon into www.mrb.tn.gov.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia