ஸ்டூடண்ட்ஸ்... எப்படிப்பட்ட காலேஜை தேர்ந்தெடுக்கனும் தெரியுமா?

Posted By:

சென்னை : எப்படிப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும். கல்லூரியின் தரம் எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்து சேர வேண்டும்.

கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன்பு மாணவ மாணவர்கள் கவனிக்க வேண்டியவைகள்

1. கல்லூரியின் உள்கட்டமைஅமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடனும் கல்லூரி அமைந்திருக்கிறதா என மாணவ மாணவியர்கள் ஆராய வேண்டும்

ஸ்டூடண்ட்ஸ்... எப்படிப்பட்ட காலேஜை தேர்ந்தெடுக்கனும் தெரியுமா?

2. நூலகம் உள்ளதா என அறிய வேண்டும். இன்றையக் காலக்கட்டத்தில் இணையதளத்தில் அனைத்து தகவல்களும் அறிய முடியும் என்றாலும் கல்லூரியில் நூலக வசதி உள்ளதா எனப் பார்க்க வேண்டும். நூலகத்தில் அரிய நூல்கள் காணப்படும். மேலும் நூலகத்தில் உள்ள பல நூல்களை எடுத்து ஆராய்ந்து படிக்கும் போது அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

3. படிக்கக் கூடிய சூழல் அந்தக் கல்லூரியில் உள்ளதா என அறிய வேண்டும். கல்லூரியில் அடிக்கடி போராட்டம், தர்ணா எதுவும் நடந்திருக்கிறதா மேலும்வருடாந்திர வகுப்பு நாள்களில் வகுப்பு ஒழுங்காக நடந்திருக்கிறதா படிக்கக் கூடிய சூழல் உள்ளதா என அறிய வேண்டும்.

4. கட்டமைப்பு வசதிகள், நூலக வசதிகள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளனவா என தெரிந்து கொள்ள வேண்டும்.

5. தரமான ஆசிரியர்களை வைத்து வகுப்புக்கள் நடத்தப்டுகின்றனவா. வகுப்புக்கள் ஓழுங்காக நடத்தப்படுகின்றனவா என ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

6. பழைய மாணவர்களின் தேர்ச்சி எப்படி இருக்கிறது. நல்ல மார்க்குகளை வாங்கி கடந்த வருட மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனரா என ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

7. முந்தைய வருட மாணவர்கள் நல்ல வேலையில் உள்ளனரா. வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளன, பெரிய நிறுவனங்களில் இருந்து கேம்பஸ் இன்ட்டர்வியூவிற்கு வந்துள்ளனரா, வேலைக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுட்ள்ளனரா என அறிய வேண்டும்.

8. கற்பிக்கும் முறை மற்றும் கற்றல் முறை கல்லூரியில் எப்படி உள்ளது. பிராக்ட்டிக்கல் பாடங்களை கற்பதற்கு தகுந்த ஆய்வுக் கூடங்கள் உள்ளனவா என அறிந்து கொள்ள வேண்டும்.

9. டெக்னாலஜி, மெத்தடாலஜி பொருத்த வரையில் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன எனவும் தெரிந்து கொள்ள வேண்டும். நவீன டெக்னாலஜி முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என தெரிந்து கொள்ள வேண்டும்.

10. கல்லூரியில் பாடங்கள் நடத்தப்படும் முறை எவ்வாறு உள்ளது. வகுப்பறை எப்படி இருக்கிறது, நிர்வாகம் எப்படி உள்ளது, ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர் , கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது. அதற்குத் தகுந்த வசதி வாய்ப்புகள் கல்லூரியில் உள்ளனவா என ஆராய்ந்து அறிந்து கல்லூரியை மாணவ மாணவியர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

English summary
Infrastructure, library, Quality teachers, laboratory facility, placement, and fees structure. you know that there are all the facilities in the colleges.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia