உங்க ஆசைகளை பிள்ளைங்க மேல திணிக்காதீங்க..! - பெற்றோருக்கு சச்சின் வேண்டுகோள்...

Posted By:

சென்னை: சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சச்சின் எ பில் லியன்டிரீம்ஸ் என்ற பெயரில் சினிமா படம் இன்று வெளியானது. இந்நிலையில் சச்சின் தெண்டுல்கர் பெற்றோருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

எனது தந்தை ஒரு போராசிரியர். ஆனால் அவர் எந்த ஒரு சமயத்திலும் தனது விருப்பத்தை என்னிடம் திணிக்கவில்லை. எனது போக்கிலேயே விட்டு விட்டார். ஆனால் வாழ்க்கையில் எதை அடைய விரும்பினாலும், அதில் மிகச்சிறந்த செயல்பாட்டை காட்ட வேண்டும் என்பதை மட்டும் அவர் எனக்கு போதித்தார்.

நானும் எனது குழந்தைகளை அவர்களது விரும்பிய துறையில் செல்ல அவர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். நீங்களும் உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு மதிப்பளியுங்கள் என்று கூறினார்.

சச்சினின் மகள், மகன்

மகன் அர்ஜூன் கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டும் மகள் சாரா குறிப்பிட்ட துறையில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நிர்ப்பந்தித்தால் அது நியாயமாக இருக்காது.

தெண்டுல்கரின் ஆசை

அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ அதுவே எனது விருப்பம். ஆனால் அவர்களை தெண்டுல்கரின் பிள்ளைகள் என்ற கோணத்தில் பார்க்காமல் அவர்களுக்குரிய சிறப்புடன் தனியாக மதிப்பிடப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சச்சினின் வேண்டுகோள்

என்னை பற்றிய படத்தின் மூலம் நான் சொல்ல விரும்பும் செய்தி இது தான். குழந்தைகள் மீது பெற்றோர் தங்களது ஆசையை திணிப்பதற்கு பதிலாக அவர்களது ஆசைக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று தெண்டுல்கர் கூறினார்.

பெற்றோர்களின் கடமை

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களால் சாதிக்க முடியாததை தன்னுடைய பிள்ளைகளை வைத்து சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பதால் சிறுவயதிலேயே அவர்கள் அதிக அழுத்தத்திற்குள்ளாகிவிடுகிறார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதில் விருப்பம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதன் படி செயல்பட்டால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.

English summary
Do not impose your wishes on your children. Parents are requested by Sachin Tendulkar.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia