தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரமற்ற பள்ளிகள் குறித்தான பட்டியலை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு, அங்கீகாரமற்ற பள்ளிகள் குறித்தான தகவலைச் செய்தித்தாளில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
education school exam result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
Do not admit children in unrecognised schools- TN School Education
Story first published: Thursday, April 11, 2019, 12:50 [IST]


Click it and Unblock the Notifications












