கட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

By Saba

சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் தாழ்த்தப்பட்ட பட்டியலின மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை 24 மடங்கு உயர்த்தியதற்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

 

குறிப்பாக, தமிழகத்தில் பொதுமக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிபிஎஸ்சி கட்டண உயர்வு

சிபிஎஸ்சி கட்டண உயர்வு

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை அதன் நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பட்டியல் இன மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்சி., எஸ்டி., பிரிவினர்களுக்கு 24 மடங்கு உயர்வு

எஸ்சி., எஸ்டி., பிரிவினர்களுக்கு 24 மடங்கு உயர்வு

இதில் எஸ்சி., எஸ்டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் 24 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2 மடங்கு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

50-யில் இருந்து 1200 ரூபாய் உயர்வு
 

50-யில் இருந்து 1200 ரூபாய் உயர்வு

எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கான கட்டணம் 50 ரூபாயாக இருந்தது. தற்போது அது 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 750 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 1500 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 12ஆம் வகுப்பில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட கூடுதல் பாடங்களுக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும் 300 ரூபாய் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பில் கூடுதல் பாடத்துக்கான 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

இதனிடையே, சிபிஎஸ்இ-யின் இந்த கட்டண உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.

சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக

சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக

நீட், நெக்ஸ்ட், புதிய கல்விக் கொள்கை வழியில் தேர்வுக் கட்டணத்தையும் உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை உணர்ந்து உடனடியாக தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என மு.க. ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டில்லி அரசு

டில்லி அரசு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு, தில்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வால், தில்லி மாணவர்கள் நிதிச் சுமையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான திட்டத்தைத் தயாரிக்கும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.

ரூ.300 மாணியம்

ரூ.300 மாணியம்

தில்லியைப் பொருத்தவரை, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தில் ரூ.300-ஐ தில்லி அரசு மானியமாக வழங்கி வந்தது. இதனால், அந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இதுவரை ரூ.50 மட்டுமே கட்டணமாக செலுத்தி வந்தனர். தற்போது கட்டண உயர்வால், தில்லி மாணவர்கள் நிதிச்சுமையை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்கும்படி, தில்லி கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தில்லிக்கென தனியாக கல்வி வாரியம்

தில்லிக்கென தனியாக கல்வி வாரியம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் தில்லி அரசு மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. அதன் அடிப்படையில், தேர்வு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் தில்லி கல்வித் துறை அதிகாரிகள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். தில்லி அரசின் கருத்துகளுக்கு, சிபிஎஸ்இ மதிப்பளிக்க வேண்டும். இல்லையென்றால் தில்லிக்கென தனியாக கல்வி வாரியத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ விளக்கம்

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பெற்றோர் தரப்பில் சிபிஎஸ்இ-க்கு கருத்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎஸ்இ சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தவறான சித்தரிப்பு

தவறான சித்தரிப்பு

சிபிஎஸ்இ அளித்துள்ள விளக்கத்தில், தேர்வுக் கட்டணம் என்பது டெல்லியில் மட்டும் உயர்த்தவில்லை. நாடு முழுவதும்தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. இதை பலர் தவறாக சித்தரித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் ஒரு முறைகூட தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. உயர்த்தப்பட்ட கட்டணம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொருந்தும்.

நிர்வாகக் குழு பரிந்துரை

நிர்வாகக் குழு பரிந்துரை

இந்தியா மட்டும் இன்றி வெளிநாடு மாணவர்களும் இங்கே பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். சிபிஎஸ்இ-யின் நிர்வாக குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இது உயர்த்தப்பட்டுள்ளது. இது சுயநிதி நிர்வாக அமைப்பு, இதன் பணிகள் லாப நோக்கம் இல்லாதது என்று சிபிஎஸ்இ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DMK Leader Stalin slam CBSE exam fee hike for SC/ST students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X