தமிழ்நாடு மின் நீதிமன்றத்தில் 69 காலிப் பணியிடங்கள்..உடனே விண்ணப்பியுங்கள்..!

Posted By:

சென்னை : மின் நீதிமன்றம் எனப்படும் இ-கோர்ட்டில் 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூன் 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின் நீதிமன்றத்தில் 69 காலிப் பணியிடங்கள்..உடனே விண்ணப்பியுங்கள்..!

காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள்

வேலை நிறுவனம் - அரசு வேலை

வேலையின் தன்மை - தட்டச்சர், இளநிலை உதவியாளர்,

வேலை இடம் - தமிழ்நாடு

கடைசி தேதி - 30 ஜூன் 2017

மொத்த காலிப்பணியிடங்கள் - 69

கல்வித்தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

ஊதியம் - குறிப்பிடப்படவில்லை

வயது வரம்பு - 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு ஜூன் 30ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

முதன்மை மாவட்ட நீதிபதி,
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட வளாகம்,
ராயக்கோட்டை சாலை,
கிருஷ்ணகிரி.

மேலும் தகவல்களுக்கு https://goo.gl/uqwDCk என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Principal District Judge released new notification on their official website for the recruitment of total 69 (Sixty Nine) jobs. should apply before 30 June

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia