தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பதிவுக்கான விண்ணப்ப சாளரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த கல்லூரி கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் கல்லூரிகள், அரசு மானிய உதவியுடன் நடத்தப்படும் கல்லூரிகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு கல்லூரிகளுக்கான தனித்தனியான விண்ணப்பங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தனித்தனியான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு பதிலாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் பயில்வதற்கு ஒரே விண்ணப்ப முறையான சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் ( Single Window System) கீழ் வரும் கல்வியாண்டு முதல் விண்ணப்பங்கள் பெற உள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவி பெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் அமைப்பதற்கு தேவையான ஆய்வை மேற்கொண்டு அது குறித்தான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக குறிப்பிட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வுக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் விண்ணப்ப செயல்முறை செயல்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications












