பள்ளிக்கல்வி இயக்குனராக ரெ. இளங்கோவன் நியமனம்.....

Posted By:

சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு இயக்குனர்கள் உள்ளனர். அவர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஒரு இயக்குனரகத்தின் தலைவராக பணிபுரிவார்கள்.

அதன்படி பணிபுரிந்த 6 இயக்குனர்களுக்கு நேற்று (திங்கட் கிழமை) பள்ளிக்கல்வித்துறை செயலாளர். த. உதயச்சந்திரன் இட மாறுதல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக பணியாற்றிய ரெ.இளங்கோவன் பள்ளிக்கல்வி இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் க.அறிவொளி மாற்றப்பட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

பள்ளிக்கல்வி இயக்குனராக ரெ. இளங்கோவன் நியமனம்.....

பள்ளிக்கல்வி இயக்குனராக பணியாற்றிய ச. கண்ணப்பன் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக பதவி ஏற்கிறார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி. ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக பணியாற்றிய செ.கார்மேகம் அங்கிருந்து மாற்றப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராக பணி புரிந்த மு. பழனிச்சாமி தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த ஆறு பேருக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர். த. உதயச்சந்திரன் இட மாறுதல் உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். இவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவின் படி செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
6 Directors Transferred in Tamilnadu School Education department. Director of School Education R. Elangovan appointed.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia