திப்ருகர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: திப்ருகர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

திப்ருகர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்!!

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள திப்ருகர் பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்தி பெற்றது. 1965-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் பல முக்கியப் படிப்புகளை வழங்கி வருகிறது.

இப்போது இந்த பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பிரிவில் ஒரு இடமும், கணிதப் பிரிவில் ஒரு இடமும் உதவிப் பேராசிரியர் பணிக்காக காத்திருக்கிறது. தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 8-ல் நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

நேர்முகத் தேர்வு பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் அமைந்துள்ள போஜ்ராய் சேத் மாநாட்டு அரங்கில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.dibru.ac.in என்ற இணையதள முகவரியைத் காணலாம்.

English summary
Dibrugarh University invited applications for 02 Assistant Professor Posts. The eligible candidates can appear for walk in interview on 08 January 2016.Dibrugarh University is a university in the Indian state of Assam. It was set up in 1965 under the provisions of the Dibrugarh University Act, 1965, enacted by the Assam Legislative Assembly. It is a teaching-cum-affiliating university with limited residential facilities.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia