பிளஸ்டூ தேர்வு.. தேர்வு மைய அலுவலர்களுக்கான அறிவுரைகள்

Posted By:

சென்னை: நாளை (02.03.2017) 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கவிருக்கவிருக்கிறது. இந்தப் பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் ஒன்பதரை லட்சம் மாணவ மாணவியர் தேர்வினை எழுத உள்ளார்கள். அதற்காக 2427 தேர்வு மையைங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு மைய அலுவலர்கள் செய்ய வேண்டியவைகள்.

ஒவ்வொரு தேர்வுமையத்திற்கும் ஒரு தேர்வு துறை அலுவலர் நியமிக்கப்படுவார். தேர்வு நேர்மையாகவும். செம்மையாகவும் நடைபெற முதன்மைக் கண்காணிப்பாளருடன் சேர்ந்து செயல்படுவது இவரது முதன்மைப் பணியாகும்

பிளஸ்டூ தேர்வு.. தேர்வு மைய அலுவலர்களுக்கான அறிவுரைகள்

தேர்வு துறை அலுவலர் முதன்மைக் கண்காணிப்பாளருடன் மூன்று நாளைக்கு முன்னதாகவே தான் நியமிக்கப்பட்ட பள்ளி வளாகத்திற்குச் சென்று அங்குத் தேர்வு அறையினை ஆய்வு செய்ய வேண்டும். அதில் மாணவர்கள் உட்கார்ந்து தேர்வு எழுதுவதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவா, மற்றும் வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு இரும்பு அலமாரிகள் உள்ளனவா, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளனவா என ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரிசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேர்வு துறை அலுவலர் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு வினாத்தாள்களை எடுத்து வரும் வழித்தட அலுவலர் வருவதற்கு முன்னதாகவே வந்து விட வேண்டும். இல்லையெனில் வழித்தட அலுவலர் தேர்வு துறை அலுவலர் வரும் வரைக்கும் காத்திருந்து பின்னர் அவரிடம் வினாத்தாள்களை ஒப்படைத்து விட்டு அடுத்த இடத்திற்குச் செல்லும் போது வழித்தட அலுவலர் தாமதமாக செல்ல வேண்டியது வரும். எனவே அதனைத் தவிர்க்கும் வகையில் தேர்வு துறை அலுவலர் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டும்.

வினாத்தாள்களை வழித்தட அலுவலரிடமிருந்து பெற்றுக் கொண்ட தேர்வு துறை அலுவலர் முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து தேர்வு மையம், தேர்வு நாள், பாடம் ஆகிய அனைத்து தகவல்களையும் சரிப்பார்த்து விட்டு அதனை இருப்பு அலமாரியில் வைத்து அரக்கு முத்திரையிட வேண்டும்.

வினாத்தாளைப் பெற்றுக் கொண்டதற்கான அடையாளமாக தேர்வு துறை அலுவலர் பிறசேர்க்கை - 1ல் ஒப்புகைச் சீட்டில் கையொப்பம் இட வேண்டும்.

மேலும் தேர்வு துறை அலுவலர் தனது அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து தேர்வுக்கட்டுப்பாட்டு அறையில் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகுதான் அலைபேசியை உபயோகிக்க வேண்டும்.

முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து உரிய விடைத்தாள் உறைகளை அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்க உதவி புரிய வேண்டும்.

9 மணிக்கு முன்னதாகவே அனைத்து வினாத்தாள்களையும் அந்தந்த அறைக்கண்காணிப்பாளர்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து கொடுக்க வேண்டும் மீதமுள்ள வினாத்தாள்களை இரும்பு அலமாரியில் வைத்து அரக்கு முத்திரையிட வேண்டும்.

முதன்மைக் கண்காணிப்பாளருடன் நுழைவு வாயிலுக்குச் சென்று தேர்வு எழுதுபவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே வராதவாறு கண்காணிக்க வேண்டும்.

தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு தேர்வு துறை அலுவலர் சென்று தேர்வுக்கு வருகை புரியாதோர் மற்றும் மொழிப் பாட விலக்கு அளிக்கப்பட்டோரின் வினாத்தாள் விடைத்தாள்களைப் பெற்று தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்று இரும்பு அலமாரியில் வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும்.

முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் அரக்கு முத்திரையிட்ட விடைத்தாள் கட்டுக்கள் கொண்ட துணி உறையின் மீது கையொப்பமிட்டு அவரவர் பள்ளி முத்திரையையும் இட வேண்டும்.

தேர்வு முடிந்த பின்பு மாணவர்களை அமைதியாக அறையை விட்டு வெறியேறச் செய்ய வேண்டும். கூடுதல் நேரம் சலுகைப் பெற்று தேர்வு எழுதுபவர்கள் தேர்வினை முடிக்கும் வரை அறைக்கண்காணிப்பாளர் அறையில் இருக்க வேண்டும். பின்பு தேர்வு துறை அலுவலர் அறைக் கண்காணிப்பாளருடன் விடைத்தாள்களை எடுத்துக் கொண்டு கட்டுக் காப்பு அறைக்கு திரும்ப வேண்டும்.

அறைக்கண்காணிப்பாளர் தேர்விற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கையும் விடைத்தாள்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என சரிப்பார்த்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும்.

முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து மொழி/பாடம்/பயிற்று மொழி வாரியாக தனித்தனியாக விடைத்தாள் கட்டுகளை துணி உறையில் வைத்து தைத்து அரக்கு முத்திரையிட்டு அதன் மீது பிறசோர்க்கை 3ல் உள்ளவாறு உரிய விபரங்களை எழுதி அதில் கையொப்பம் இட வேண்டும்.

அரக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள்களை முதன்கைக் கண்காணிப்பாளருடன் இணைந்து வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு தொடங்குவதில் இருந்து முடியும் வரை துறை அலுவலர் முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து செயல்பட வேண்டும்.

English summary
Departmental officer things to do in the examination day and hall.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia