டெல்லி பல்கலை.யில் பி.ஜி.படிப்புகள்: மே 30 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்..!!

Posted By:

டெல்லி : டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை, மாணவர்களின் புகார் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த விண்ணப்பப் பதிவுத் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டெல்லி பல்கலை.யில் பி.ஜி.படிப்புகள்: மே 30 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்..!!

மே 30-ம் தேதி நள்ளிரவு வரை மாணவர்கள் பதிவு செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் மொத்தம் 66 வகையான பி.ஜி. படிப்புகளில் 8 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. இதில் 50 சதவீத இடங்களில் டெல்லி பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்படும்.

மீதமுள்ள இடங்கள் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஒதுக்கப்படும்.

நுழைவுத் தேர்வு ஜூன் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும். நேர்முகத் தேர்வுகள் ஜூலை 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.

இதற்கான நுழைவுத் தேர்வுகள் டெல்லியைத் தவிர கொல்கத்தா, சென்னை, ஜம்மு, ஆமதாபாத், நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
Delhi University has extended online registration date for admission to post-graduate courses following several complaints from students about server failure to process the applications. As per new dates, the registrations will be opened till May 30, 2016. According to Hindustan Times "The 'Online Registration and Registration Fee Payment' for applying to the Postgraduate/Masters courses shall reopen from May, 25, 2016 and will continue till the midnight of May, 30, 2016" the registrar said in a statement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia