டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிக்கணுமா?

Posted By:

சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விலங்கியில் துறையில் மட்டும் பிஎச்.டி. பயில விரும்புபவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

2015-16-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும் இது. படிக்க விரும்புபவர்கள் ஆன்-லைன்மூலம் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். அதே நேரத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிக்கணுமா?

விலங்கியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள முடியும் என டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்களை இந்தப் படிப்புக்கு பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்.

மேலும் விவரங்களுக்கு http://www.du.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பங்களை அக்டோபர் 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
University of Delhi (DU), Delhi has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programme in the Department of Zoology. Admissions are offered in various sub disciplines for the session 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia