டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பான எல்எல்பி படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2016-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் உள்ள சட்டப்படிப்பு இடங்களில் மாணவர்கள் சேர்த்துகொள்ளப்படுவர்.

இந்தப் படிப்பில் சேர மாணவர்களுக்கு குறைந்தது 20 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும். மேலும் அவர்கள் 10, 12-வது, பட்டப்படிப்பு என்ற வரிசையில் படித்திருக்கவேண்டும். அவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர், விதவைகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
இந்தப் படிப்புக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்கவும். பொதுப் பிரிவினருக்குக் கட்டணமாக ரூ.750 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.350 செலுத்தினால் போதும்.
நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் எல்எல்பி படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஏப்ரல் 30-ம் தேதிக்குள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் மே மாதம் அளிக்கப்படும். தேர்வுகள் ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்வு முடிவுகளை ஜூன் 26-ம் தேதி வெளியிட பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு http://www.du.ac.in/du/index.php?page=law-2 என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications












