பட்டப்படிப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு

Posted By:

சென்னை: இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் போன்ற பட்டப்படிப்புகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை 2,330 ஆக உயர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த முடிவை எடுத்துள்ளது பல்கலைக்கழகம்.

பட்டப்படிப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு

தொடக்கத்தில் பேச்சிலர் ஸ்டடீஸ், வரலாறு, ஆங்கிலம் போன்ற பிரிவுகளில் மாணவர்கள் எண்ணிக்கையை கூடுதலாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் எஸ்ஜிடிபி கல்சா கல்லூரியில் புதிதாக ஃபாரன்சிக் சயின்ஸ் படிப்பையும் சேர்க்கை டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குழுவில் உள்ள 14 பேர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதேபோல பி.எஸ்சி. கணிதம் (ஹானர்ஸ்), பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்(ஹானர்ஸ்), பி.ஏ வரலாறு (ஹானர்ஸ்) பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை கூடுதலாக்கை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இயற்பியல், ஆங்கிலம், ஜியாகிரபி, பிபிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து கமலா நேரு கல்லூரியில் முதல்முதலாக பி.ஏ. பிரெஞ்ச் (ஹானர்ஸ்) படிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்த படிப்பு இங்குதான் அறிமுகம் செய்யப்படுகிறது.

English summary
University of Delhi has decided to increase the number of undergraduate intake for the first time in 8 years. With the exception of certificate, PG, engineering and nursing programmes, about 2,330 seat will be added across various courses and colleges. The increase in the number of seat means the increase in seats for popular courses like Bachelor of Business studies, History and English. A new course in forensic science will be added at SGTB Khalsa College.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia