டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை இனி ஆன்-லைனில் மட்டுமே!!

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் விரைவில் ஆன்-லைனில் சேர்க்கை முறை கொண்டு வரப்படவுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் இந்த ஆன்-லைன் சேர்க்கையைத் தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 2016-ம் கல்வியாண்டில் பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆன்-லைன் சேர்க்கை முறையைக் கொண்டு வரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை இனி ஆன்-லைனில் மட்டுமே!!

இதற்காக 24 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்துள்ளது. இந்தக் குழுவில் அறிவியல், வணிகம், கலைப் பிரிவுகளின் டீன்கள், 9 கல்லூரிகளின் முதல்வர்கள், பல்வேறு கல்விக் கவுன்சில்களின் உறுப்பினர்கள் இடம்பெற்று இருப்பர்.

இந்தக் குழு ஒன்று சேர்ந்து ஆன்-லைன் சேர்க்கைக்கான கொள்கையைத் தயாரித்து அடுத்த மாதம் வெளியிடும்.

இதுகுறித்து குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: சேர்க்கை முழுவதும் ஆன்-லைனில்தான் இனி செய்யப்படவேண்டும் என்று குழு உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக ஆன்-லைன் சேர்க்கை பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் நேரடியாக வந்து விண்ணப்பங்கள் கொடுத்து சேரும் முறையும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு முழுவதும் ஆன்-லைன் முறை கடைப்பிடிக்கப்படும் என்றார் அவர்.

இதற்கான அனுமதியையும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Delhi University is gearing for undergraduate courses admissions for the academic session 2016. The DU is considering to make the entire admission process online for this year. The university has constituted a comprising of 24 members, which includes deans from faculties of science, commerce and arts, nine college principals and members from the executive and academic councils, to formulate an admission policy which will be notified by next month. "The committee members have recommended that the admission process should go entirely online. Last year, the varsity had attempted the same but offline admissions also continued as there were concerns from parents and students about the feasibility of the process," a committee member told PTI.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X