டெல்லி: ஆன்-லைன் சேர்க்கை மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதல் நாளிலேயே 39 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பு கல்லூரிகளில் உள்ள 60 ஆயிரம் இடங்களை ஆன்-லைன் மூலம் நிரப்ப முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து முதல்முறையாக இந்த முறையைக் கடைப்பிடித்தது டெல்லி பல்கலைக்கழகம். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் சேர்க்கையின்போது 39 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் சேர்ந்தனர்.
இந்த முறை மூலம் ஜூன் 19 வரை மாணவர்கள் சேர முடியும்.
இந்த சேர்க்கை முறையின் போது சில நேரங்களில், பல்கலைக்கழக சர்வர் குறைவான வேகத்தில் செயல்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் அது சரி செய்யப்பட்டது.
முதல் நாள் சேர்க்கையின்போது 39 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். இதில் 5,600 பேர் தங்களது கட்டணம் உள்பட அனைத்துப் பணிகளையும் முடித்து படிப்பில் சேர்ந்துவிட்டனர் என்று பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications

