டெல்லி போலீஸிலும் நீங்க வேலைக்கு சேரலாம்!

Posted By:

சென்னை: டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

50 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 6-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று டெல்லி போலீஸ்துறை அறிவித்துள்ளது.

ஆண், பெண் கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆண் கான்ஸ்டபிள் பணியிடங்கள் 33-ம், பெண் கான்ஸ்டபிள் பணியிடங்கள் 17-ம் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஊதியம் ரூ5,200-20,200 மற்றும் ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் இருக்கும்.

இந்த வேலையில் 12-ம் வகுப்பு முடித்திருக்கவேண்டும். வயது வரம்பு ஆடவருக்கு 17 முதல் 21-ம், மகளிருக்கு 18 முதல் 25-ம் இருக்கலாம்.

பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதி உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

English summary
Delhi Police invited applications for the posts of Constable (Exe)-Male and Constable (Exe) Female on temporary basis. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 06 November 2015. Delhi Police Vacancy Details: Name of the Posts: 1. Constable (Exe)-Male- 33 Posts 2. Constable (Exe.) Female- 17 Posts Pay Scale PB- 1 Rs. 5200-20200/- + Grade Pay Rs. 2000/- Eligibility Criteria for Delhi Police Constable Jobs: Educational Qualification: 10+2 (senior secondary) pass from a recognized board.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia