சென்னை: ஹோமியோபதி, பார்மசி டிப்ளமோ படிப்புகளை அறிமுகம் செய்ய டெல்லி யூனியன் பிரதேச அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த 2 வருட டிப்ளமோ படிப்புகளை டெல்லி அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த படிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் டெல்லி மாநில அரசு நடத்தும் மருத்துவமனைகள், சிறிய வகை மருத்துவமனைகள், கிளினிக்குகளில் ஆட்களைப் பணியமர்த்த முடியும் என்று அந்த மாநில அரசு நம்புகிறது.

டெல்லி மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து ஹோமியோ மருத்துவ முறை வாரியம் இந்த படிப்புகளை அறிமுகம் செய்கிறது
இதுகுறித்து வாரியத்தின் தலைவர் கே.கே. ஜுனேஜா கூறியதாவது: ஹோமியோபதி மருத்துவ முறை வளர இந்த படிப்புகள் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு வரலாற்றுச் சாதனையாகவே நாங்கள் கருதுகிறோம்.
எழுத்து, செய்முறைத் தேர்வுகள் இந்த படிப்பில் இடம்பெறும். இதுதொடர்பான அரசாணையை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஹோமியோபதி, பார்மஸி படிப்புகளை முடிப்பதன் மூலம் அரசு நடத்தும் ஹோமியோபதி கல்லூரிகள், மருத்துவமனைகள், டெல்லி அரசு நடத்தும் சிறு மருத்துவமனைகள், கிளினிக்குகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications

