ஜார்க்கண்டில் உதயமாகிறது பாதுகாப்பு பல்கலைக்கழகம்!!

Posted By:

சென்னை: விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் உதயமாகிறது.

பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல்லை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கல் அண்மையில் நாட்டினார். இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஜார்க்கண்ட் ரக்ஷா சக்தி பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் உதயமாகிறது பாதுகாப்பு பல்கலைக்கழகம்!!

டெல்லியிலிருந்து இருந்தவாறே காணொலி முறையில் இந்த பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கல்லை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாட்டினார். இதுகுறித்து மனோகர் பாரிக்கர் கூறியதாவது: பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தற்போது அடிக்கல்லை நாட்டியுள்ளோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கப்படும்.

பாதுகாப்புத்துறையை நவீனப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சைபர் கிரைம்களும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சைபர் தாக்குதல்களைச் சமாளிப்பதற்குரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
A defence university is all set to come up in Jharkhand after Defence Minister Manohar Parrikar laid the foundation stone of the varsity here on Saturday. Laying online the foundation stone for the Jharkhand Raksha Shakti University, Parrikar assured the state of full cooperation in the defence sector and for the establishment of the university. Speaking on the occasion, Parrikar said modern day defence was not all about strength but it also requires brains, in the wake of threats of cyber attacks.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia