சண்டீகர்: பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனம் கட்டுவதற்கு இருந்த தைடகள் நீக்கப்பட்டுள்ளன.
அமிருதசரஸில் ஐஐஎம் அமைப்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

ஆனால் ஐஐஎம் கட்டுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலம் ஐஐஎம் சொசைட்டி பெயரில் மாற்றப்படவில்லை. இதனால் ஐஐஎம் அமைப்பது தள்ளிப் போனது. கடந்த ஆண்டு ஜூலை மாதமே ஐஐஎம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவதற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி வருவதாக இருந்தார்.
ஆனால் நிலப்பிரச்னை காரணமாக இது தள்ளிப் போனது.
இந்த நிலையில் இந்தப் பிரச்னைகள் நீங்கியுள்ளன என்று பஞ்சாப் மாநில உயர்கல்வி அமைச்சர் சுர்ஜி சிங் ராக்ரா தெரிவித்தார். வரும் 10-ம் தேதி நிலம், ஐஐஎம் சொசைட்டி பெயரில் மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கட்டட வேலைகள் தொடங்கும் என்றார் அவர்.
ஒரு ஏக்கர் ரூ.1.25 கோடி என்ற விலை ஐஐஎம் கட்ட நிலம் வாங்கப்படடுள்ளது. மொத்தம் 60 ஏக்கர் வாங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












