40 என்ஜீனியரிங் கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்களை ரத்து செய்ய முடிவு..!

Posted By:

சென்னை : 40 என்ஜீனியரிங் கல்லூரிகள் தகவல் தொழில் நுட்ப பிரிவில் 3 ஆயிரம் இடங்களை ரத்துசெய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. தமிழ் நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜீனியரிங் கல்லூரிகள் 584 உள்ளன

அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பி.இ. இடங்களில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அண்ணா பல்கலைக்கழகதத்திற்கு சமர்ப்பிக்கப்படுமம். 35 சதவீத இடங்களில் நிர்வாகம் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக என்ஜீனியரிங் படித்து முடித்தவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் என்ஜீனியரிங் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்தது.

வேலை வாய்ப்பு குறைவு

இதன் காரணமாக அண்ணாபல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய கலந்தாய்வு மூலம் சில என்ஜீனியரிங் கல்லூரிகளில் 10 அல்லது 20 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த குறைவான மாணவர்களை கொண்டு கல்லூரி நடத்துவது கடினம். மேலும் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது.

மாணவர்கள் திணறல்

அதன் காரணமாக இந்த வருடம் ஏராளமான மாணவ மாணவிகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு காரணமாக பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இல்லை என்ற நிலை உள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியாவதிலும் தாமதம் ஆகிறது. இதனால் மருத்துவம், என்ஜீனியரிங் இரண்டுக்கும் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம் என்று முடிவு எடுக்க திணறி வருகிறார்கள்.

என்ஜீனியரிங் கல்லூரிகள் மூடல்

பல என்ஜீனியரிங் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் போதிய அளவில் சேராததால் கடந்த ஆண்டு 22 கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்தன. இந்த வருடமும் 5 என்ஜீனியரிங் கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளன.

3000 ஐ.டி. இடங்கள்

இது தவிர இந்த ஆண்டு 47 என்ஜீனியரிங் கல்லூரிகள் பி.இ., எம்.இ. படிப்புகள் பலவற்றை ரத்து செய்து அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், ஏ.ஐ.சி.டி.இக்கும் விண்ணப்பித்துள்ளன. அவற்றில் 40 கல்லூரிகள் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) பிரிவில் மட்டும் 3 ஆயிரம் இடங்களை ரத்து செய்வதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. ஆயிரம் இடங்கள் மற்ற பிரிவுகளில் உள்ளவை.

English summary
40 engineering colleges decided to cancel 3,000 seats in the Information Technology Division.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia