நீட் தேர்வு.. கடைசி தேதி மார்ச் 1 - வேகமாக விண்ணப்பியுங்கள்!

Posted By:

சென்னை : தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் தேர்வு மே மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 1ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கு மேல் விண்ணப்பிக்க முடியாது. இன்னும் இரு தினங்களே உள்ளன. விரைவில் விண்ணப்பியுங்கள்.

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

நீட் தேர்வு.. கடைசி தேதி மார்ச் 1 - வேகமாக விண்ணப்பியுங்கள்!

அலுவலக இணையதளமான cbseneet.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று அப்ளை ஆன்லைன் என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆன்லைன் அப்ளிகேஷனை நிரப்ப வேண்டும். மேலும் கீழே வரும் பதிவு எண்ணையைத் தவறாமல் குறித்து வைத்துக் கொள்ளவும்.

உங்கள் கையொப்பம் மற்றும் புகைப் படத்தினை அப்லோடு செய்யவும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு அனைத்து தகவல்களையும் சரி என உறுதி செய்து சமர்ப்பித்து விட்டு அதனையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நீட் தேர்வு நடத்தப்படுவதின் நோக்கம்

சிபிஎஸ்சி நாடு முழுவதும் நாடு முழுவதும் நீட் தேர்வினை நடத்துகிறது. இது அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் ஒப்புதல் படி நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இந்தத் தகுதி தேர்வு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.

அரசுக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு என்று 85% இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு கலந்நதாய்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களில் மாநில அரசுக்கு என ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடும் கலந்தாய்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

நீட் தேர்வு நடத்தப்படும் மொழிகள்

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் தேர்வு தமிழ் உட்பட 8 மொழிகளில் நடக்க உள்ளது. இந்தியாவில் 80 இடங்களில் உள்ள 1500 மையங்களில் நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. (ஹிந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடக்க விருக்கிறது).

நீட் தேர்வு

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படும் நீட் தேர்வு 7ம் தேதி நடைபெறும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ், படிப்பதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும்.

உச்ச நீதி மன்ற ஆணையின்படி தனியார் கல்லூரிகள் உள்ள இட ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களும் நீட் தேர்வு மூலம் கடந்த ஆண்டு (2016-17) நிரப்பப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. மொத்தம் 180 ஆப்ஜக்ட்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும் இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

English summary
As the CBSE NEET UG 2017 exam is scheduled to be held on May 7, the registrations for the same will conclude in three days time. The last date to apply is March 1.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia