சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி: இளநிலைப் பட்டத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

Posted By:

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 2015 மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.

தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய பல்கலைக்கழக இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி: இளநிலைப் பட்டத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

நடப்பு ஆண்டு மாணவர்கள் தேர்வு மறு மதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 1,000 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லாத மாணவர்கள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இரண்டுக்கும் தொலைநிலைக் கல்வி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24 கடைசி தேதி என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

English summary
Madras university will be announcing the reults of Distance education course results today. For results students can logon into www.ideunom.ac.in, www.unom.ac.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia