பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு... கால அவகாசம் நீட்டிப்பு

Posted By:

சென்னை : 2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அற்கான பட்டியல் 10 மார்ச் 2017ம் தேதி வெளியிடப்பட்டது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரிர் தகுதித் தேர்வு வாரியத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்விதி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே 2012,13 மற்றும் 14ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1111 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு... கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 10 மார்ச் 2017ம் தேதி ஏற்கெனவே வெளியிடடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் ஆன்லைனில் 20ம் தேதி வரை இருக்கும் அதனை நீங்கள் சரிப்பார்த்துக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

24ஆயிரத்து 666பேர் தங்கள் பதிவை ஆன்லைன் மூலம் சரிபார்த்து திருத்தம் செய்துள்ளனர். ஆனால் இன்னும் 7ஆயிரத்து 961 பட்டதாரிகள் சரிபார்க்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே அவர்களுக்காக இன்று (23.03.2017) ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது என டி.ஆர்.பி உறுப்பினர் உறுப்பினர் செயலாளர் உமா தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தத்தை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும் டி.ஆர்.பி உறுப்பினர் செயலாளர் உமா தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல் பெற www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
T.R.B Member Secretary has been told Given extra one day for graduate teachers list verification by online. Today is last day for online list verification.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia