JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு

நாடுமுழுவதும் 28 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், நவோதயா வித்யாலயா பள்ளியில் 2020-2021 ஆண்டிற்கு ஆறாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வு 11.1.2020 மற்றும் 11.4.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்வு நடைபெறும் என்பது குறித்தான பட்டியலும் நவோதயா பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2019 செப்டம்பர் 15ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான தேதி செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு www.navodaya.gov.in அல்லது www.nvsadmissionclassix.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும் இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Date Extended For Navodaya Vidyalaya Class VI admission JNVST-2020
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X