தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினைத் தொடர்ந்து இன்று (அக். 31) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தற்போது சென்னை, கன்னியாகுமரி கடலோர பகுதியில் உருவாகியுள்ள மகா புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதனிடையே கனமழையைத் தொடர்ந்து தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம், நீலகிரி என எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா என நான்கு தாலுகாவில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கொடைக்கானல், ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












