மவுசு அதிகரிக்கும் ”சைபர் பாரன்சிக்” படிப்புகள் – குற்றப் புலனாய்வில் வேலையும் நிச்சயம்!

Posted By:

சென்னை: தமிழகத்தில் சைபர் பாரன்சிக் எனப்படும் இணையதளக் குற்றப் புலனாய்வு படிப்புகளுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

இன்டர்நெட்டில் நடக்கும் சைபர் குற்றங்கள் சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்துவிட்டன. இது தொடர்பான தகவல்கள் கம்ப்யூட்டரில் பாதுகாத்து விசாரணையின் போது கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சைபர் குற்றங்களை பற்றிய தகவல்களை திரட்டும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும். இது பற்றி கற்றுத்தருவதே சைபர் பரான்சிக்ஸ்.

மவுசு அதிகரிக்கும் ”சைபர் பாரன்சிக்” படிப்புகள் – குற்றப் புலனாய்வில் வேலையும் நிச்சயம்!

விஞ்ஞான முறைப்படி தகவல்களை திரட்டுவதும், டிஜிட்டல் முறையில் அவற்றை பாதுகாப்பதும் சைபர் பாரன்சிக்சில் கற்றுத்தருகின்றனர். இது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் போது உதவ, சைபர் பாரன்சிக்ஸ் கற்றிருக்க வேண்டியது அவசியம்.

சென்னை பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி, "சைபர் பாரன்சிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் செக்யூரிட்டி" கற்றுத்தரப்படுகிறது.

டிஜிட்டல் தகவல்களை மாற்றியமைப்பதன் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் சைபர் பாரன்சிக்சின் அவசியம் தற்போது உணரப்படுகிறது. எனவே சைபர் பாரன்சிக்ஸ் படிப்பவர்களுக்கு வேலை நிச்சயம்.

English summary
Cyber forensic studies were having good future for the students. It will made the job opportunities in forensic department.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia