சியுஎஸ்ஏடி சிஏடி தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

டெல்லி: கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (சியுஎஸ்ஏடி) சிஏடி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயாராக உள்ளன. இந்த ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

சியுஎஸ்ஏடி சிஏடி 2016 தேர்வுகள் ஏப்ரல் 30, மே 1-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் சியுஎஸ்ஏடி கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று தயாராக உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் http://www.cusat.ac.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு 'CUSAT CAT Admit Card 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண் போன்ற விவரங்களைத் தந்தவுடன் ஹால் டிக்கெட்டுகள் கிடைக்கும். இதை பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொண்டு தேர்வுக்குச் செல்லலாம்.

இந்தத் தேர்வுகள் புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், அலகாபாத், லக்னோ, ராஞ்சி, வாரணாசி, கோட்டா, துபை ஆகிய நகரங்களில் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிஏடி தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் சேரலாம்.

English summary
CUSAT (Cochin University of Science and Technology) CAT exam 2016 admit cards will be released today i.e on April 19 on the official website. Registrants can visit the website to download the admit cards. How to download admit card? Log on to the official website On the homepage, click on 'CUSAT CAT Admit Card 2016' Enter your registration number and other required details in the given fields Click on the submit button Admit card will be displayed on the screen Download the same and take a printout for future reference Exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia