9 மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted By:

புதுடெல்லி: தமிழகம் உள்பட 9 மத்திய பல்கலைக்கழகங்களுக்கான க்யூசெட் (CUCET) நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் (மார்ச் 14) விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

9 மத்திய பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர க்யூசெட் என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதை ஆண்டுதோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர்.

9 மத்திய பல்கலை. நுழைவுத்தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்த நுழைவுத் தேர்வை ராஜஸ்தான் மத்திய பல்கலை வரும் கல்வி ஆண்டுக்கு நடத்தவுள்ளது. இதற்கு மார்ச் 14 முதல், ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம். வரும்

மே, 21, 22ல் தேர்வுகள் நடக்கும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை உட்பட நாடு முழுவதும் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவுகளில் சேர முடியும்.

கூடுதல் தகவல்களுக்கு http://cucet16.co.in/WebPage/Home.aspx என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Rajasthan central university has announced the dates for CUCET exams. from March 14 onward students can apply for the exams. For more details aspirants can logon into http://cucet16.co.in/WebPage/Home.aspx

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia