மத்திய அரசினால் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ உடன் இணைந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான மத்திய தேர்வுகளில் இதுவரை இருந்த தமிழ்மொழி நீக்கப்பட்டதோடு, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளையும் மத்திய அரசு நீக்கியதாக தகவல் வெளியானது.

இதனிடையே, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
தமிழ் உள்ளிட்ட ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கரோ, குஜராத்தி, கனாடா, காசி, மாலயாலம், மனிப்புரி, மராத்தி, மிஸ்ஸோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு, திபெத்தியன் மற்றும் உருது மொழியில் 19 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
தகுதித் தேர்வில் தமிழ் மொழி நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications












