மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி... விண்ணப்பிக்க தயாரா?

Posted By:

சென்னை : மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ள 240 காலியிடங்கள் நிரப்பப்படுவதற்காக விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி -

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

 மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி... விண்ணப்பிக்க தயாரா?

உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சிவில் , அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஆங்கிலம், பொது அறிவியல் மற்றும் கணிதப்பாடம் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

கான்ஸ்டபிள் பணிக்கு - குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு (மெட்ரிக்) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினை மத்திய அரசு மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ஐ.டி.ஐயில் ஒரு வருட தொழிநுட்ப அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

பணியிடங்கள் : 240

பணியின் தன்மை : சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள்

வயது வரம்பு : 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் : சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.200/- உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிக்கு ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தேர்வு முறை : உடல் தர நிலை தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET) ,சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி - 06.04.2017

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.05.2017

விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - 01.05.2017

தேர்வு நடைபெறும் நாள் - 30.07.2017

மேலும் விவரங்களுக்கு http://crpf.nic.in/rec/writereaddata/Portal/RecruitmentAdvertise/ADVERTISE/111213970317-eng.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

English summary
Central Reserve Police Force (CRPF) Online Recruitment of Sub Inspector (SI) Overseer, Assistant Sub Inspector (ASI) Draughtsman and Constable Pioneer (Mason/ Plumber/ Electrician/ Carpenter/ Painter) in CRPF Vacancy Year 2016-2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia