சிபிஎஸ்இ பள்ளிகளில் புதியமொழி கல்விகொள்கை வைகோ எதிர்ப்பு

Posted By:

மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் அந்நிய மொழி புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் .

சிபிஎஸ்இ பள்ளிகளில் புதியமொழி கல்விகொள்கையானது  பாஜக கொள்கையை தினிக்கின்றது

சிபிஎஸ்இயின் புதியக்கல்வி கொள்கை :

மத்திய அரசின் புதியக்கல்வி கொள்கையின்படி மூன்று மொழி கொள்கையில் அந்நிய மொழிகளான ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் மூன்றாவது மொழியாக கற்றுவந்ததை நீக்கி இந்தி, ஆங்கிலம் மற்றும் எட்டாம் அட்டவணையில் உள்ள மொழிகளுள் ஒன்றை கற்றுகொள்ளலாம் ஆனால் அந்நிய மொழிகளை நான்கு அல்லது ஐந்தாவது மொழியாக கற்கலாமே தவிற மூன்றாவது மொழிகளாக கற்க இயலாது என இதுவரை இருந்த கல்விக்கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது .

சிபிஎஸ்சியின் கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு :

மத்திய அரசின் கல்விகொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மறுமலர்ச்சி கட்சியின் தலைவர் வைகோ . சிபிஎஸ்சியின் இந்த கல்விகொள்கை சம்ஸ்கிருத திணிப்புக்கு வழிவகுப்பதுபோல் உள்ளது , இந்து கொள்கையை நிலைநிறுத்த மத்திய அரசால் நடத்தப்படும் திணிப்பு கொள்கையாகவே தெரிகின்றது என்றார்.

சிபிஎஸ்சியின் இந்த கொள்கையானது நாட்டுமக்களிடையே இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத கொள்கையை திணிப்பதாகவே உள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார் . மேலும் வைகோ தெரிவித்த கருத்தானது ஒரே மதம் ஒரே கொள்கை ஒரே நாடு என்ற கொள்கையை திணிக்கும் விதமாகவுள்ளது என்றார், அத்துடன் இந்தியாவின் பண்முகத்தன்மையை குலைத்து இந்து கொள்கையை புகுத்தி விளையாடும் போக்கை ஆளும் பாஜாக அரசு நிறுத்த வேண்டும் . மாணவர்களிடையே மத்திய அரசு திணிக்கும் போக்கு சரியான முறைமையன்று என கண்டித்துள்ளார் வைகோ.

மத்திய அரசின் கல்விக்கொள்கையானது மாணவர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது . இதுவரை ஆர்வமுடன் கற்றுவந்த பாடங்கள் நீக்கப்படுவதால் அந்நிய மொழியறிவு கற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகுமே என்ற குமுரல்களை காணமுடிகிறது .

பெற்றோர்கள் அதிர்ச்சி:

மத்திய அரசின் புதியகல்வி கொள்கையால் அந்நிய மொழியறிவு கற்பது தடைப்படுமே என்று பெற்றோர்கள் கவலைக்குள்ளாகுகின்றனர் . பொதுமொழி ஆங்கிலம் மற்றும் இந்தி, அத்துடன் அயல்மொழி கற்றுவந்த மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றமே தற்பொழுது நிலவிவருகின்றது.

சார்ந்த பதிவுகள்:

பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்  

அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டண பெறும் அராஜகம் !!

English summary
here article tell about critics of new education policy of CBSE

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia