லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் கிரெடாய்!!

Posted By:

சென்னை: லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு). வீடுகளைக் கட்டுவதன் மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

சென்னைக் கிளை

கிரெடாயின் சென்னைக் கிளையானது ஆண்டுதோறும் சிறப்பான முறையில் சொத்துகள் கண்காட்சியை (ஃபேர்புரோ) நடத்தி வருகிறது.

வர்த்தக மையம்

இந்த ஆண்டு கிரெடாய் சென்னை அமைப்பால் பிராப்பர்ட்டி கண்காட்சியான ஃபேர்புரொ, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தொடங்கிவைக்கப்பட்டது.

நடிகை சுகாசினி

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரான யு. கார்த்திக், பிராண்டு தூதரும், நடிகையுமான சுகாசினி மணிரத்னம் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலர் P. யாதவ் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை...

இக்கண்காட்சியில் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.10 கோடி வரை உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், பங்களாக்கள், தனி வீடுகள், வில்லாக்கள் விற்பனை செய்யப்பட்டன.

வங்கிகள்

ஏராளமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. சுமார் 80 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன. எஸ்பிஐ, எல்ஐசிஎஃப்எல், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, டாடா கேபிடல், ஆக்ஸிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றன. இந்த வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் வீடுகளை பொதுமக்கள் வாங்க முடிந்தது.

அஜீத் குமார் சோர்டியா

இதுகுறித்து கிரெடாய்-சென்னை அமைப்பின் தலைவரான அஜீத் குமார் சோர்டியா கூறியதாவது: எமது வாடிக்கையாளர்கள் அளவற்ற நம்பிக்கையுடனும், உற்சாக உணர்வோடும், அதிக ஆர்வத்தோடும் வருகை தந்து பங்கேற்கின்ற ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாக ஃபேர்புரொ 2016| நடைபெற்றுள்ளது.

எண்ணிக்கை அதிகரிப்பு

இக்கண்காட்சி தொடங்கிய நாளிலிருந்தே வீடுகளை வாங்க திட்டமிட்டு ஆர்வத்தோடு வருபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

பொருத்தமான இல்லம்

இன்றைய நாளில், கிரெடாய் பேனரின்கீழ் சான்றளிக்கப்பட்டுள்ள மதிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய நிறுவனங்களால் வழங்கப்படும் 250-க்கும் அதிகமான சொத்துகள் அடங்கிய ஒரு விரிவான தொகுப்பிலிருந்து தங்களுக்கு பிடித்த, பொருத்தமான இல்லத்தை தேர்வு செய்ததற்கான வாய்ப்பை எமது வாடிக்கையாளர்கள் இக்கண்காட்சி மூலம் பெறுகின்றனர்.

நியாயமான விலை

இக்கண்காட்சியின் பெயரான ஃபேர்புரொ 2016 சுட்டிக்காட்டுவதைப்போலவே, வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலைகள் மற்றும் ஆதாயங்களை வழங்குவதாக இந்நிகழ்வு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் குடியிருப்புகளை விற்பனை செய்பவர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் ஆதாயத்தையும், வெற்றியையும் வழங்குகிறதாக இந்நிகழ்வு அமைந்திருக்கிறது.

உகந்த செயல்தளம்

இந்த இருதரப்பினம் ஒரே இடத்தில் சந்தித்து செயலாற்றுவதற்கு ஒரு உகந்த செயல்தளமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் அவர்.
கிரெடாய் சென்னை அமைப்பின் செயலாளரான ஹபீப் கூறியதாவது: இது முதன்முதலாக தொடங்கப்பட்டதிலிருந்து ஃபேர்புரொ, எங்களுக்கு பெருமை வழங்கும் நிகழ்வாக இருந்துவந்திருக்கிறது.

எதிர்பார்ப்பு பூர்த்தி

வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வதிலும் மற்றும் பூர்த்திசெய்வதிலும் இது மிகப்பெரிய வெற்றியினை சந்தித்திருக்கிறது.

கடந்த ஆண்டை விட சிறப்பு

அனைத்து தரப்பிலிருந்தும் சரியான கலவையில் ஆதரவும், ஊக்கமும் கிடைக்கப்பெறுவதால் ஒவ்வொரு ஆண்டின் நிகழ்வும் முந்தைய நிகழ்வைவிட இன்னும் சிறப்பானதாக அமைகிறது. எனவே இந்த முறையும் மற்றுமொரு சிறப்பான பயனுள்ள ஆண்டாக இருக்குமென்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

சீரிய முறையில்...

இந்திய ரியல் எஸ்டேட் வளர்ச்சி நிறுவனங்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (கிரெடாய்) சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

வெற்றிகரமான கண்காட்சி

இந்த அமைப்பின் சென்னை கிளையானது இந்த ஃபேர்புரோ கண்காட்சியை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

லட்சக்கணக்கான தொழிலாளர்கள்...

கிரெடாய் அமைப்பானது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. சென்னையில் லேண்ட் டெவலப்பிங் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது கிரெடாய்.

English summary
Fairpro the annual property expo organized by CREDAI Chennai was inaugurated by Thiru D. P. Yadav, IAS Secretary Housing and urban development dept, in the presence of Thiru A. Karthik IAS member secretary CMDA and Brand ambassador Mrs. Suhasini Manirathinam at a glittering function at Chennai Trade Centre.About 80 developers are displaying 300 plus properties ranging from 10 Lakhs to 10 Crs in the expo which will last till 21st Feb 2016. Leading banks like SBI, LICHFL, HDFC, ICICIBANK, TATA CAPITAL, AXIS BANK are also participating in the Expo,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia