தமிழகத்தில் விரைவில் திறக்கப்படும் பள்ளிகள்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியிலான வகுப்புகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்தியாவில் டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு பொதுமக்கள் மத்தியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் விரைவில் திறக்கப்படும் பள்ளிகள்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய அறிவிப்பு!

இச்சூழ்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது ஒரு வருடத்தைக் கடந்து தற்போதும் அமலிலிருந்து வருகிறது. இதனிடையே, தற்போது கொரோனா இரண்டாம் அலையாக இந்தியாவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தீவிரமடைந்த கொரோனா

தமிழகத்தில் தீவிரமடைந்த கொரோனா

குறிப்பாக, தமிழகத்தில் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் சமீப வாரங்களாக அந்த எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

பள்ளிகள் திறப்பு எப்போது?
 

பள்ளிகள் திறப்பு எப்போது?

இதனிடையே, கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பள்ளி, கல்லூரி போன்ற கல்வி சார்ந்த துறைகளே. மாணவர்கள் ஒரு ஆண்டிற்கும் மேலாக பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் வழியிலேயே கல்விகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தைகளைத் தாக்கும்

குழந்தைகளைத் தாக்கும்

தற்போதுள்ள கொரோனா பாதிப்பு பெருமளவில் குழந்தைகளை பாதிக்காமல் இருந்தாலும் தொற்று பரவலுக்கான ஆதாரமாக இருக்கும் சூழல் காணப்படுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு தடுப்பூசி

மாணவர்களுக்கு தடுப்பூசி

18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் சூழல் வந்தால் தான் பள்ளிகள் திறப்பு சாத்தியப்படும் என கூறப்படுகிறது.

செப்டம்பரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

செப்டம்பரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இரண்டு முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுதான் மதிப்பெண், விரும்பினால் மீண்டும் தேர்வு! தமிழக அரசு முடிவு

விரைவில் திறக்கப்படும் பள்ளிகள்

விரைவில் திறக்கப்படும் பள்ளிகள்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தகவல் பரவியது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பது குறித்து பேசினார்.

12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்

12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா மூன்றாம் அலை

கொரோனா மூன்றாம் அலை

மேலும் அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா 3ஆம் அலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே ஐசிஎம்ஆர், உலக சுகாதார அமைப்பு ஆகியவை பள்ளிகள் திறப்பு குறித்து வெளியிடும் பரிந்துரைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறப்பு

கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறப்பு

தொடர்ந்து, முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுகிறார்கள். எனவே, கொரோனா முற்றிலுமாக கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Covid- 19: When will schools open in Tamil Nadu? minister anbil mahesh answer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X