செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளத

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த விபரங்களை காணலாம் வாங்க.

ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள்

ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள்

கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நிலையில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வழியில் வகுப்பு

ஆன்லைன் வழியில் வகுப்பு

கல்வி ஆண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க சாத்தியமில்லாத சூழலே நீடித்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற சூழலே நிலவி வருகிறது. மேலும், தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு அதிரடி

இந்நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் ன மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இல்லை

தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இல்லை

கொரோனா கட்டுப்பாட்டு மையங்களுக்கு வெளியே உள்ள 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளுக்குச் செல்லலாம். தொற்று ஏற்பட்டு தனிமைப்படுப்படுத்த கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்போர் பள்ளிக்குச் செல்ல அனுமதி இல்லை. அதே நேரத்தில் பெற்றோர்கள் தன்னார்வ அடிப்படையில் அனுமதி பெற்று, ஆசிரியர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி பள்ளிக்கு வரலாம்.

வகுப்பறையில் தனிமனித இடைவெளி

வகுப்பறையில் தனிமனித இடைவெளி

மேலும், மாணவர்கள் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள கூடாது. மாணவர்களுக்கு இடையே போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் வகுப்பறைகளுக்குள் தொற்றைத் தடுக்கவும் பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

தனிமைப் படுத்தப்பட்ட பள்ளிகள்

தனிமைப் படுத்தப்பட்ட பள்ளிகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் மையங்களாகச் செயல்பட்ட பள்ளிகள் செயல்படத் தொடங்கும் முன்னர், முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டியது கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Covid 19: Schools allowed to reopen for Classes 9 to 12 from Sept 21
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+